ஆசிய கோப்பை: ஹாங்காங் அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது வங்கதேசம்.!

2025 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.

Bangladesh - hongkong

அபுதாபி :ஆசிய கோப்பை 2025 தொடரில், வங்கதேச அணி ஹாங்காங் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸின் அரைசதத்தின் அடிப்படையில் 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. நிக்சாத் கான் (42) மற்றும் கேப்டன் யசிம் முர்தசா (28) ஆகியோர் ஹாங்காங் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது, தன்ஸிம் ஹசன், மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

144 ரன்கள் இலக்கை துரத்திய வங்கதேச அணி, கேப்டன் லிட்டன் தாஸின் அதிரடியான 59 ரன்கள் மற்றும் தவ்ஹித் ஹரிடோயின் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் உதவியுடன் 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டியது. லிட்டன் தாஸ் தனது அபார ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியுடன் வங்கதேச அணி தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.