ஹாங்காங் ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற கப்பல் உணவகம் ஹாங்காங்கில் உள்ள ஜம்போ கப்பல் உணவகம். இந்த கப்பல் உணவகம் 1976ம் ஆண்டில் அதன் சேவையை தொடங்கியது. மேலும் இந்த கப்பல் உணவகத்தை பார்த்தால் அரண்மனை போல தோற்றம் உடையது. இந்த கப்பல் உணவகத்திற்கு பல்வேறு புகழ்பெற்ற மனிதர்கள் வருகை புரிந்துள்ளனர். பிரிட்டிஷ் ராணி எலிசபத் கூட இந்த ஜம்போ கப்பல் உணவகத்திற்கு வருகை தந்துள்ளார் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலையானது அதிகரித்து வரும் நிலையில்,நாளை முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவையையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,1,619 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவல் எதிரொலி காரணமாக ஹாங்காங் விமானப் போக்குவரத்து துறை நாளை முதல் மே 3 ஆம் தேதி வரை இந்தியாவுடனான […]
கொரோனா சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஹாங்காங் அரசு, அங்குள்ள கண்காட்சி மையத்தை 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரமாக இருக்கிறது. ஹாங்காங். இங்கு, கொரோனா பரவ தொடங்கியது முதல் உடனே எல்லைகளில் கட்டுப்பாட்டை அதிகரித்து, போக்குவரத்தை துண்டித்தது. இதனால், ஜூன் மாதம் வரையில் கொரோனாவை வெகுவாக கட்டுப்படுத்தி வைத்திருந்தது. ஆனால், சென்ற மாதம் ஹாங்காங்கில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது […]
இந்தியாவில் இருந்து விமானங்களை ஹாங்காங் அனுமதிக்கவில்லை, இருதரப்பு நிறுவ குவைத் அரசாங்கத்துடன் விவாதித்து வருவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா இரு நாடுகளுக்கிடையில் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் விமானங்களும் சில கட்டுப்பாடுகளின் போது சிறப்பு சர்வதேச பட்டய விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் மார்ச் 23 முதல் இந்தியாவில் […]
ஹாங் காங்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. உலக அளவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஹாங் காங்கில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனை தலைமை நிர்வாகி கேரி லாம் அவர்கள் கூறுகையில், நாங்கள் […]
ஹாங்காங் சீனாவில் சிறப்பு அந்தஸ்து கொண்ட மாகாணமாக உள்ளது. இந்நிலையில், இதன் சிறப்பு அந்தஸ்த்தை நீக்க சீனா முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஹாங்காங்கில் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு உள்ள தன்னாட்சி அதிகாரத்தை நீக்கும் சட்டம் என்று பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வந்தது. இந்தச் சட்டத்தால் ஹாங்காங்கில் இயங்கிவரும் 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும்.மேலும், ஹாங்காங்கிற்கு தற்போது அமெரிக்க குடிமக்கள் விசா […]
ஹாங்காங்கில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்ற வாக்களிப்பில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் நகரமானது 1997ஆம் ஆண்டு சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் ‘ ஒரே நாடு இரண்டு முறை’ என்கிற விதிமுறை அடிப்படையின் கீழ் செயல்பட தொடங்கியது. கடந்த 2014ஆம் ஆண்டு சீன அரசானது, ஹாங்காங் நகர தலைவர் பொறுப்பை நியமிக்கும் முன், சீனாவின் ஒப்புதல் பெற்று பின்னரே தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என புது சட்டத்தை ஹாங்காங் நகர் […]
ஆசிய நிதி மையத்தில் பெய்ஜிங் ஒரு புதிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர், ஹாங்காங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் ஆசிய நிதி மையத்திலிருந்து மக்களையும் வணிகங்களையும் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்ததாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை அறிவித்தார். கடந்த வாரம் ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் சூழ்நிலைகளின் அடிப்படை மாற்றம் என்றும் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா நிறுத்திவைக்கும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார். ஹாங்காங்கின் குடிமக்கள் இருப்பார்கள் அவர்கள் வேறு […]
பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்க ஹாங்காங் அரசு விடுத்த கோரிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஹாங்காங் சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் தொகை கொண்டது. அங்கு சீனா தனது அதிகார பலத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை உலக நாடுகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த வாரம் தேசிய அமல்படுத்தியது. அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்பவர்,மேலும் சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்பவர், மட்டுமின்றி கோஷமிடுவோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் […]
ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது மிளகு குண்டுகளை கொண்டு தாக்கி அப்புறப்படுத்தினர். இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் நகரமானது 1997ஆம் ஆண்டு சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் ‘ ஒரே நாடு இரண்டு முறை’ என்கிற விதிமுறை அடிப்படையின் கீழ் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு சீன அரசானது, ஹாங்காங் நகர தலைவர் பொறுப்பை நியமிக்கும் முன், சீனாவின் ஒப்புதல் பெற்று பின்னரே தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் […]
ஹாங்காங் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருடைய பொமரேனியன் நாய் வேகமாக பரவிய வரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக அந்த நாயை தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அந்த நாய் குணமடைந்தது என உறுதியான பிறகே கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பினர். இதையெடுத்து நேற்று முன்தினம் அந்த நாய் இறந்துள்ளது. நாய் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விரும்பினர். ஆனால் நாய் உரிமையாளர் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா […]
சீனா ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணி நாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து முதன்முறையாக விலங்குகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இந்த நாய்க்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து அந்த நாயை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் நாய்க்கு கொரோனா பதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நாயை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கொரோனா பாதிப்பு நீங்கிய பின்னர் நாய் உரிமையாளரிடம் கொடுக்க மருத்துவர் முடிவு செய்துள்ளனர்.