அரக்கோணத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டது மாபெரும் படுகொலை- வேல்முருகன் ..!

Velmurugan said various projects opposed by the people would be canceled if the DMK came to power.

மக்கள் எதிர்த்த பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என வேல்முருகன் தெரிவித்தார்.

சென்னையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,  திமுக கூட்டணியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும். பண்ருட்டி தொகுதி, திமுக கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் குறித்து பேசினேன்.

தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்த பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும். தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியில் அமரும். அரக்கோணத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டது மாபெரும் படுகொலை என வேல்முருகன் தெரிவித்தார்.