சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்ட்டுள்ள ஞானசேகரன் சார் என்று தொலைபேசியில் பேசியதாக மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் யார் அவர் என்கிற விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதலில், இந்த வழக்கை சென்னை காவல்துறை விசாரித்து வந்தபோது ஞானசேகரன் சார் என்று யாரிடமும் பேசவில்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் விசாரணை […]
Velmurugan : சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில் பாடகர் வேல்முருகன் கைது. தமிழ் சினிமாவில் பல ஹிட் படைகளை பாடி இருக்கும் பிரபலமான பாடகர் வேல் முருகன் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக சென்று கொண்டு இருந்த சமயத்தில் அப்போது அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் இரும்பு தடுப்பு வைத்து சாலை அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. […]
சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவ கூலித் தொழிலாளி வேல்முருகன் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து […]
சாதிச்சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயிரிழந்த வேல்முருகன் இறப்புக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்து இருந்துள்ளார். இவர் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சாதி சான்றிதழ் பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்தி, […]
திரு.ஆ.ராசா.அவர்கள் குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து “காவி சங்கி” கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல கடுமையான கண்டனத்திற்குரியது என வேல்முருகன் ட்வீட். ஆ.ராசா எம்.பி சமீபத்தில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது அது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில், ஆ.ராசா-வுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘திமுக வின் துணைப் பொதுச் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை […]
வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் பயன்பெறும் வகையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வன்னியர்கள் 10.5%, சீர்மரபினர் 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என சிறப்பு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், […]
மக்கள் எதிர்த்த பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என வேல்முருகன் தெரிவித்தார். சென்னையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும். பண்ருட்டி தொகுதி, திமுக கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் குறித்து பேசினேன். தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்த பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும். தனிப்பெரும்பான்மையுடன் திமுக […]
திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அக்கட்சி தலைவர் வேல்முருகன் அறிவிப்பு. திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து, அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் தேர்தலில் போட்டியிட விருப்பும் தொகுதியை திமுகவிடம் எடுத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து, எந்த தொகுதி என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு […]
அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். தி.மு.க- தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடந்தபின்னர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வரவேண்டும். தொடர்ந்து, பாஜக அரசும், அதிமுக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மக்கள் விரோத திட்டங்களையும், மக்கள் விரோத சட்டங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி […]
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வரும் 6ஆம் தேதி வருமாறு தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனுக்கு திமுக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இழுபறியில் உள்ள கட்சிகள் : இன்று மட்டும் திமுக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,விசிக ,இந்திய கம்யூனிஸ்ட் ,மதிமுக வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் விசிக உடன் 6 தொகுதிகள் […]
தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி கவிழ்ப்புகளில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை தான் செய்து வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா பொறுப்பேற்ற பின், குறுக்கு வழியில், சட்டத்திற்கு புறம்பாக பணம், பதவிகளை கொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி கவிழ்ப்புகளில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி […]
சமூகநீதி சார்ந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றும் அதிகாரத்தை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தந்தது யார்? சமூகநீதி தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பாரதிதாசன் பல்கலைகழக நியமனத்தில் கடைபிடிக்க கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூகநீதியை சீர்குலைக்க முயற்சித்த அபூர்வாவை உயர்கல்வி செயலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வேல்முருகன் கூறியுள்ளார்.
செல்வமுருகன் மரணம் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் வெளியிட்ட வேல்முருகன். விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டதாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செல்வமுருகன் நெய்வேலி நகர போலீசாரால், கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு அவருக்கு வெட்டு வந்ததாகவும், அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது […]
கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க.. நாங்க எல்லாம் மனிதர்கள் இல்லையா ? விலங்குகளா ? என்று வேல்முருகன் ஆவேசமாக பேசியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் . இந்த […]
அர்ச்சனாவை பார்த்து “தலைவலி வந்துச்சு” என்று பாலாஜி கூறியதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார் . உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் . இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய வேல்முருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் […]
வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமா பேசி, என்னை அசிங்க படுத்துறீங்க என வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக சுரேஷ் அவர்கள் வேல்முருகனுக்கு வேஷ்டி ஒன்றை போட்டுக்கொள்ளுமாறு கொடுத்ததாக அனைவர் முன்னிலையிலும் வேல்முருகன் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வேஷ்டி குறித்து தற்போது பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதம் எழுந்துள்ளது. வேல்முருகன் கோபத்தில் பொங்கி எழுந்து சுரேஷ் அவர்களிடம் கத்துகிறார். இதோ அந்த வீடியோ, View this post on Instagram #Day9 […]
மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் வேல்முருகனின் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்த திட்டமிடப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில், சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீராக்க 150 போலீசார் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாகர்கோவில் மாநகரில் […]
ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷின் பேச்சு ஆபத்தான பேச்சு. கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியதால், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கோரியுள்ளனர். தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது […]
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது, தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக இடைவெளியுடன் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசு பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்றும் வடமாநிலத்தை சேர்ந்த இந்தியை தாய் மொழியாக […]