#WorldAIDSDay : எச்.ஐ.வி உள்ளோரை நம்மில் ஒருவராக அன்பால் அரவணைத்து; ஆதரவுக்கரம் நீட்டி வாழ வைப்போம் – மு.க.ஸ்டாலின்

#WorldAIDSDay ஆன இந்நாளில், தமிழ்நாட்டில் #HIV தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்!

தேசிய எச்.ஐ.வி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

இன்று உலகம் முழுவதும் தேசிய எச்.ஐ.வி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

இந்த ஆண்டின் மையக்கருத்து எச்.ஐ.வி / எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவந்து அத்துடன் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம். ‘End Inequalities. End AIDs, End Pandemics’ என்பதேயாகும்.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய 25 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப் போட்டியும், இணையதள வினாடி-வினாப் போட்டிகளும் ‘புதிய இந்தியா ‘@75’ என்கிற தலைப்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

‘எச்.ஐ.வி. உள்ளோரை அன்பால் அரவணைப்போம்; ஆதரவுக் கரம் நீட்டுவோம்’.’ என  தெரிவித்துள்ளார்.

unknown node