உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி ட்வீட். இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் இன்று. எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நோய்த் தடுப்பு செயல்பாடுகளை முன்னெடுப்பதோடு, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவது அவசியம். எந்தவித புறக்கணிப்பும், ஒதுக்குதலுமின்றி அவர்களுக்கான […]
உலக எய்ட்ஸ் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் …!! 1988-முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களை கௌரவபடுத்தும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினமானது எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது.1988 ஆம் ஆண்டு இந்த தினமானது “முதல் சர்வதேச சுகாதார தினமாக” நிறுவப்பட்டது. இந்த நாளானது […]
தேசிய எச்.ஐ.வி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று உலகம் முழுவதும் தேசிய எச்.ஐ.வி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த ஆண்டின் மையக்கருத்து எச்.ஐ.வி / எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவந்து அத்துடன் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம். […]