எச்.ஐ.வி தொற்று : திரிபுராவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களிடையே எய்ட்ஸ் நோய் தீவிரமடைந்துள்ளதாக வெளியான தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழப்பு என சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த செய்தி உண்மை தான் என அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை அனைத்துமே கடந்த 2007ம் ஆண்டு முதல் […]
HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள். நெதர்லாந்து நாட்டின் மிக்பெரிய பல்கலைக்கழகமான ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2020-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற Crispr-Cas என்கிற மரபணு-எடிட்டிங் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிரணுக்களில் இருந்து HIV-ஐ வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். READ MORE – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! Crispr என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா போன்ற புரோகாரியோடிக் உயிரினங்களின் மரபணுக்களில் […]
டெல்லியில் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை கண்டித்து எச்ஐவி நோயாளிகள் போராட்டம் நடத்தினர். எச்.ஐ.வி நோயாளிகள் குழு டெல்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) அலுவலகத்திற்கு முன்பு கடந்த சில நாட்களாக ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் கடந்த 5 மாதங்களாக உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் கிடைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2 வருட ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 85 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக கடந்த இரண்டு வருடமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு […]
பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. குற்றவாளியின் மருத்துவ அறிக்கையை நீதிபதிகள் பார்த்துள்ளனர். அதில், அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அவரால் ஒருவரின் ஆதரவின்றி நடக்க முடியாது எனவும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மீண்டும், மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை அளித்த மருத்துவர்கள். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன். இவருக்கு வயது 52. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் மதுரை அரசு […]
தேசிய எச்.ஐ.வி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று உலகம் முழுவதும் தேசிய எச்.ஐ.வி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த ஆண்டின் மையக்கருத்து எச்.ஐ.வி / எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவந்து அத்துடன் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம். […]
அசாமின் நாகான் மாவட்ட சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 85 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பரில் அசாமின் நாகான் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறையில் மொத்தம் 85 கைதிகள் எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாகான் பிபி சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் எல் சி நாத் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியதாவது, எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக […]
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொரோனா தாக்கும் அபாயம் குறைவாக உள்ளதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பு குறித்து பலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில் எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா வைரஸ் பரவல் மிக குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவ துறையின் […]
எய்ட்ஸ் அல்லது பாலியல் பரவும் நோய்த்தொற்று பற்றி பேசும்போதெல்லாம், நம் மனதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு இடம் பெறுகிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கும் எச்.ஐ.வி பரவுமா.? இது ஒரு சிறந்த கேள்வி. செக்ஸ் என்பது ஊடுருவல்களை மட்டும் குறிக்காது, அது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அவர்களுக்கு எய்ட்ஸ் உட்பட பல பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளும் இருக்கலாம். உண்மையில், செக்ஸ் மூலம் தொற்று பரவுவதற்கு மிகப்பெரிய காரணம் […]
சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி வைரஸில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்துள்ளார் அமெரிக்கா பெண் ஒருவர். கடந்த 1992 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வியால் தாக்கப்பட்ட கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க பெண்மணி லோரீன் வில்லன்பெர்க் என்பவர் முழுவதுமாக இந்த ஹெச்.ஐ.வி வைரஸின் பிடியிலிருந்து சிகிச்சை ஏதும் இன்றி குணம் அடைந்துள்ளார். தற்போது 66 வயதாகும் இவருக்கு கடந்த 28 வருடங்களாக கிருமித்தொற்று இருந்துள்ளது. ஆனால் இத்தனை வருடங்கள் ஆகவே இவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி […]
கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், தி லான்செட் குளோபல் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனா வைரஸ் […]
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எச்.ஐ.வி நோயைக் குணப்படுத்திய முதல் எச்.ஐ.வி நோயாளியக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். எச்.ஐ.வி உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கிறது. அன்மையில் “பேர்லின்” மற்றும் “லண்டன்” என இரண்டு ஆண் நோயாளிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக அதிக ஆபத்துள்ள ஸ்டெம் செல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் இந்த நோயைக் குணப்படுத்தியதாகத் தெரிகிறது. தற்போது ஒரு சர்வதேச ஆய்வாளர் குழு, அவர்கள் மூன்றாவது நோயாளியைக் […]
இந்தியாவில் கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில அரசு கூறியுள்ளது. சீனா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இதையெடுத்து ஜெய்ப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 இத்தாலி சுற்றுலா பயணிகள் இருந்த நிலையில் அவர்களுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டது. இதனால் […]
கடந்த ஜூன் மாதம் கிரண் குமாருக்கும், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கிரண் குமார் பெண் வீட்டிற்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறினார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் ( 30) .இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் கிரண் குமாருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு […]
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இருபத்திரண்டு வயது நிரம்பிய திருமணமான பெண் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்ற தவறான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி அம்மாநில சட்டசபையில் அதிர்வலையை உண்டாக்கியது. இறந்துபோன அந்த பெண்ணிற்கு, ‘தனக்கு எச்ஐவி வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான சோதனை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு எச்ஐவி இருப்பதாக அந்த மருத்துவமனை தகவல் கொடுத்து உள்ளது. இதனை, […]
சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு நேற்று நிவாரண தொகையாக 25 லட்சமம், ஒரு வீடு, அரசு வேலை என நிவாரண தொகையினை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருக்கிறதா என இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைபெற்றது. அதில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ‘ பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் நிதியுதவி அளிக்கவும், அந்த நிதியில் 10 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரிலும், 15 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகள் பெயரிலும் பிரித்து கொடுக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. பெண்ணின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியானது, அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியான பிறகுதான் நிவாரண […]
எச்.ஐ .வியை குணப்படுவதற்கு தற்போது வரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை ஆனால் ஏ . ஆர் .டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிக்சை மட்டும் அளிக்கப்படுகிறது.இந்த அறுவை சிகிக்சை எச்.ஐ .வி நோயில் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக காப்பாற்றாது ஆனால் வாழ்நாளை நீடித்து வாழ்வதற்கு உதவி செய்யும். இந்த கிருமியை அழிப்பதற்கு உலகில் உள்ள ஆராச்சியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் எலியின் உடலில் எச்.ஐ .வி கிருமியை அழித்து நெப்ரஸ்கோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராச்சியாளர்கள் சாதனை படைத்தது […]
பாகிஸ்தான் தெற்கு பகுதியில் உள்ள சில குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்ததில் ரத்தத்தில் அவர்கள் அனைவரும் எச் ஐ வி வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாகிஸ்தானில் ஒரு சிறு பகுதியில் உள்ள 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பரவியிருந்தது கண்டறியப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள பலரும் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்தத்தை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இவர்களில் 607 பேருக்கு […]