#BREAKING: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? ஆலோசனை தொடங்கியது.!

The Chief Minister of Tamil Nadu is in consultation with MK Stalin's medical team at the General Secretariat.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? அல்லது நிறைவுபெற்று கொள்ளலாமா என்பது குறித்து 19 பேர் கொண்ட நிபுணர் மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கொரனோ பரவல் கட்டுக்குள் வராததால் மே 31 வரை அல்லது ஜூன் முதல் வாரம் வரை ஊரடங்கு  நீட்டிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மருத்துவ குழு ஆலோசனைக்குப் பின் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஊரடங்கு நீட்டிப்புக்கான  வாய்ப்பு உள்ளது என்பது போல் பேசினார்.