மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையிலும் பணியை தொடரும், தங்களது உடல் நலத்தையோ, குடும்பத்தையோ […]
+2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பலமுறை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் […]
டுவிட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையை விட கோவை மாவட்டம் தான் தினமும் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத் தொகை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டு நிலையில் அவருடைய வருங்காலத்திற்காக பல்வேறு விதமான நிவாரண உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அந்த குழந்தை 18 வயதில் […]
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ எம். அனந்த கிருஷ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) கடந்த ஒரு வாரமாக நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் […]
கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழக அளவில் அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஒரு வார ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. கோவை வருகையின்போது […]
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தருமாறு பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் […]
சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (Oxygen Concentators) மு.க ஸ்டாலின் வழங்கினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது ஆக்சிஜன் கருவிகள். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கான சிகிச்சைக்காக ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளபோதும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். தேவையின்றி வருபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சிறப்பாக அமல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரியுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்கிறார். ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட […]
தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீடிக்கலாம் என சட்டமன்ற குழு பரிந்துரைத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் கிராமத்தில் தடுப்பூசி போட கூடிய பணியை தொடங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று செங்கல்பட்டில் HLL நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டேன். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் கிடங்கை ஆய்வு செய்தேன். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் கிராமத்தில் ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி போட கூடிய பணியை தொடங்கி வைத்தேன். அனைவருக்கும் தடுப்பூசி […]
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள HLL பயோடெக் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். ரூபாய் 600 கோடி செலவில் தொடங்கப்பட்ட மையம் 9 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக […]
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை. தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனை தொடர்ந்து, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் இறையன்பு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள், பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தனர். இதுவரை ரூ.181 கோடி நிதி கிடைத்துள்ள நிலையில், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியிலிருந்து கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தினசரி கொரோனா தினசரி கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.6 லட்சமாக அதிகரித்து இருப்பதாலும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகளை வாங்க இரண்டாவது கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். […]
கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். கொரோனா கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலில் இருக்கிறது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன்பொதுமுடக்கம் அமலாக்கவுள்ளது. இந்த நிலையில், தனது தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். கொளத்தூர் தொகுதியில் 40,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட 12 வகையான நிவாரண மளிகைப் […]
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில் வங்கக் கடலில் மீன்பிடிக்க தடை […]
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒரு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் […]
தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், மேலும், கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு […]
இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என முதல்வர் தெரிவித்தார். நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா ஒரு அளவுக்கு […]