முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? மக்களுக்கு பதில் வேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய அரசு மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழகத்திற்கு  வழங்கியுள்ள நிதி எவ்வளவு ? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழகத்திற்கு  வழங்கியுள்ள நிதி எவ்வளவு ? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 6600 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.ஜூன் 17 -ஆம் தேதி அன்று ‘உபகரணங்கள் கொள்முதல் செய்ய 3,000 கோடி ரூபாய் வேண்டும் என்று பிரதமரிடம் கோரினார் முதலமைச்சர். தமிழக அதிகாரிகள் மத்திய அரசு வழங்கியுள்ள ‘ரூ.1500 கோடிதான் இருக்கும்’ என்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி? அதிகாரிகள் சரியென்றால் முதலமைச்சர் பழனிச்சாமி  மவுனம் காப்பது ஏன்? மக்களுக்கு பதில் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node