மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும்? – மத்திய அரசு பதில்!!

According to the Central Government, it is not known when the construction work of the Madurai AIIMS will begin.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு தெரிவித்தாக தகவல்.

மதுரை தோப்பூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்காக முதல்கட்டமாக கணிசமான தொகையை வழங்குவதாக ஜப்பான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தற்போது அந்த மருத்துவமனையின் திட்ட அதிகாரிகள் நியமன பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தெரிவித்தாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து சமூக ஆர்வலர் தரப்பில் ஆர்டிஐ-யில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

மேலும், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ள சுகாதாரத் துறை, விரிவான மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் என்பது குறித்த கேள்விக்கு சுகாதாரத் துறை பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.