சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலைகளை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதத்திற்கு இருமுறையும் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும்எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இதுபோன்று, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் […]
சமீப நாட்களாக நாட்டில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது பெரியவர்களை விட 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெருமளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒருபுறம் கொரோனாவுக்கு பிறகு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ராஜுவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு […]
புதுச்சேரி மாநில மேம்பாட்டுக்காக மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் எல் முருகன் பேச்சு. புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன், புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பபுதுச்சேரியில் முதற்கட்டமாக 1,400 […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
வேலுமணி மீதான ஊழல் வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவதற்கு கடும் கண்டனம். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு ஆஜராவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு […]
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு […]
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தற்போது அக்னிபத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படைகளில் […]
மத்திய அரசு ஊழியர்கள் இனி கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் மற்றும் விபிஎன் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு. மத்திய அரசு ஊழியர்கள் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் (VPN) மற்றும் Google Drive மற்றும் Dropbox போன்ற கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என இந்திய அரசின் சமீபத்திய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In) மற்றும் தேசிய தகவல் மையம் (NIC), கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் மற்றும் விபிஎன் ஆகியவற்றைப் பயன்படுத்த […]
மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி நிதியை ஈவுத்தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், மும்பையில் ரிசர்வ் வங்கியின் 596 வது மத்திய இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய உள்நாட்டு சவால்கள் முதல் புவிசார் அரசியல் தாக்கங்களின் தாக்கம் வரை விவாதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில், ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை, ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து […]
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை. நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் 4.21% ஆக இருந்த சில்லறை பணவீக்கம் 2022 ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், 0.84% உயர்ந்து, தற்போது 7.79% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் […]
தனியார் தடுப்பூசி மையங்கள்,அதிகபட்சமாக ரூ.150 வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தல். இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில்,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.மேலும்,பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று […]
இரண்டு தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு […]
மின்துறை சீர்திருத்தத்திற்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறையின் சீரமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம், அசாம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை ஒட்டுமொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய […]
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவரின் பதவி காலம் வருகின்ற 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் நிரந்தர தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு […]
எம்.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. அகில இந்திய ஒதுக்கீடு தொடர்பான எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீட்டை ஓ.பி.சி பிரிவினருக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கிடைத்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல, தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்று மத்திய அரசு தகவல். இதுகுறித்து பேசிய மத்திய அரசு, கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல, தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பை 98.99% தடுப்பதில் பலனளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத சில இடங்களில் பாதிப்பு அதிகரிப்பதை காண முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கோவிஷீல்டு […]
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விளக்கமளிக்க இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் […]
அரசின் சொத்துக்களை குத்தைகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது என்று ராகுல் காந்தி விமர்சனம். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுகிறது. அரசின் சொத்துக்களை குத்தைகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. நாட்டில் உள்ள 25 விமான நிலையங்கள், உணவு தானிய கிடங்குகள் தனியாருக்கு விற்க பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் […]
மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், அதில் தமிழகத்தில் சில சொத்துக்களும் உள்ளது. மத்திய அரசின் தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் தனியாரிடம் விட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 491 கிமீ தேசிய நெடுஞ்சாசலை, தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும் தனியாருக்கு விடப்பட உள்ளன. மேலும், நீலகிரி மலை ரயிலுக்கு தனியார் குத்தகை பட்டியலில் […]
நாட்டின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேசிய பணமாக்கல் பைப்லைன் (என்எம்பி) யை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நித்தி அயோக் சிஇஓ அபிதாப் காந்த் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் […]