நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் – அமைச்சர்

Minister K. Ramachandran has announced that those coming to the Nilgiris must have a certificate of 2 dose vaccination.

நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவிப்பு.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள்ளான கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று நீலகிரில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், அங்கிருந்துதமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் விமான நிலையம் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில், நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.