சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இதன் காரணமாகவே 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதனால், நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கோயம்பத்தூர் விமான நிலையம் வந்தடைந்த திரௌபதி, ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்குச் செல்வார் […]
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன, ரயில் பாதையில் கற்பாறைகள் விழுந்தன. தண்டவாளத்தின் குறுக்கே மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் உதகமண்டலம் மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது, மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆம், சீரமைப்பு பணிகள் முடிந்ததால், நாளை […]
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரஞ்ச் அலர்ட் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. […]
நீலகிரி :பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 43). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், இன்று காலை 6 மணி அளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பேருந்து கோத்தகிரியை நெருங்கும்போது, சாலை ஓரம் மின் கம்பி ஒன்று அறுந்து […]
Nilgiris Recruitment : நீலகிரி ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் ஹையர் செகண்டரி ஸ்கூல் , தமிழ்நாட்டின் நீலகிரியில் TGT, Guardian, PET ஆசிரியர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன கல்வி தகுதி இருக்கவேண்டும் எவ்வளவு சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் பதவியின் பெயர் எண்ணிக்கை டிஜிடி 3 கார்டியன் (ஆண்கள்) 1 PET ஆசிரியர் […]
நீலகிரி : மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக, காவல்துறை சார்பாக பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர் என்று மாவட்ட […]
நீலகிரி : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை நீலகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் (District Health Society, The Nigliris) நீலகிரி மாவட்டத்தில் ஓமியோபதித்துறை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, என்னென்ன பதவிகள் இருக்கிறது வேலைக்கு என்னென்ன தகுதிகள் வேணும் என்பது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலையில் சேர விரும்பும் […]
நீலகிரி: தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் மழையில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, மரம் சரிந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மழைநீர் ஊருக்குள் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் பல்வேறு பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டது. நேற்று வரை கொட்டித்திருத்த […]
தேர்தல் முடிவுகள்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நீலகிரி தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஆ.ராசா 4,65,772 வாக்குகளை பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவரை எதிர்த்து பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட எல்.முருகன் 2,28,597 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 2,16,707 வாக்குகளையும், நாம் தமிழர் […]
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19 ஆம் தேதி) முதல் (மே 21 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் […]
Election2024: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தடுக்கும் வகையில் தேர்தல் பிறகும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையில், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் […]
Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. […]
Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது. READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.! இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு-1 கிராமம், மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் கடந்த 15-ஆம் தேதி மாலை கூடலூர்-அய்யன்கொல்லியில் 20 பயணிகளுடன் பயணம் செய்த ‘TN-43-N-0779’ என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து மழவன் சேரம்பாடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மின்கம்பி அறுந்து விழுந்ததில், மேற்படி பேருந்து நாகராஜ் (வயது 49) மற்றும் பேருந்தில் பயணம் செய்த சேரங்கோடு-1 கிராமம், பூஞ்சக்கொல்லி பகுதியைச் சேர்ந்த […]
நீலகிரியில் உள்ள பந்தலூர் அருகில் கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே பகுதியில் சில தினங்களுக்கு முன் ஒரு சிறுமியை சிறுத்தை தாக்கியது. அதில் சிறுமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் தனது 3 வயது மகளை வீட்டிற்கு […]
கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. மேலும், 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அது மட்டும் இல்லாமல், ஓரிரு இடங்களில் அதிகாலை […]
நேற்று தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. அதேபோல நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை […]
ஆனிக்கல் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம். – நீலகிரி மாவட்ட ஆட்சியர். உதகமண்டலம் (ஊட்டி) அருகே ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில், 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு […]
பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை உடனடியாக அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் […]
நாளை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]