தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த திமுக பொதுச்செயலாளர் க அன்பழகனின் உடலுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
unknown nodeஇந்த நிலையில் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுருந்தார். அதில் தமிழ் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இனமானப் பேராசிரியருக்கு விசிக சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தையும், அவரை இழந்து நிற்கும் திமுகவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.