"வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்" – எம்ஜிஆர் பாடலைபாடி அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்.!

Minister Jayakumar, who was involved in the MGR song campaign 'Come on victory come join me'.

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற எம்ஜிஆர் பாடலைபாடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் சாலையோர கடைகளில் டீ குடித்தும், மேளம் அடித்தும் மற்றும் குடத்தில் தண்ணீர் பிடித்து நூதன முறையில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று பிரச்சாரத்தின்போது எம்ஜிஆர் பாடலை பாடினார். தம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு சவால்விடும் வகையில் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.