கல்வி கடன் ரத்து செய்யப்படுமா.? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பதில்.!

மாணவர்களின் பணத்தை வசூலித்து அதனை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது போல எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது தவறு.- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து.

மாணவர்களின் பணத்தை வசூலித்து அதனை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது போல எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது தவறு.- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து.

பாராளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் இன்று காலை முதல் உறுப்பினர்கள் கேள்வி கேட்டும், கோரிக்கைகள் வைத்தும் வருகின்றனர். அதற்கு மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் பதில் கூறியும் வருகின்றனர்.

அதன்படி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி சுப்ராயன் இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், பெரு நிறுவனங்களில் லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல குறைந்த அளவே இருக்கும் மாணவர்களின் உயர்கல்வி கடன் ரத்து செய்யப்படுமா என கேட்டறிந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பெரு நிறுவனங்களில் கடனை அரசு ரத்து செய்யவில்லை என கூறினார். இதற்க்கு பொய் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். உடனே பொய் என்ற வார்த்தை நாடாளுமன்ற வளாகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என  தமிழில் விளக்கம் அளித்தார்.

மேலும், மாணவர்களின் பணத்தை வசூலித்து அதனை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது போல எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது தவறு. பெரு நிறுவனங்களின் கடனை மத்திய அரசு வசூலித்து அதனை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வருகிறோம் எனவும் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார்.