அண்மையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு புதிய சட்டங்கள் மசோதாக்கள் இதில் குறிப்பாக மூன்று வாகன சட்டங்கள் அமலாக்கப்பட்டன. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட மசோதாக்கள் சட்டமாகியுள்ளன. அதன் அடிப்படையில் குற்ற செயல்களுக்கான சம்பவத்திற்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாலையில் விபத்துகளை ஏற்படுத்தி விட்டு தப்பித்து ஓடும் டிரைவர்களுக்கு விபத்தின் வீரியத்திற்கு தகுந்தார் போல் 10 ஆண்டுகள் வரையில் சிறை […]
நேற்று முன்தினம் (டிசம்பர் 13) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22ஆம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்வையிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். அவர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்து வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேற்கண்ட இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா கையெழுத்திட்ட அனுமதிநுழைவு […]
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சமயத்தில் மைசூர் பாஜக எம்பியின் அனுமதி பெற்று பார்வையாளர்கள் அரங்கிற்கு வந்த ர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் திடீரென மக்களவை எம்பிக்கள் இருக்கும் பகுதியில் குதித்து விட்டனர். மேலும், மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளியே […]
நேற்று நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அந்த தினத்தில் நாடாளுமன்ற பார்வையாளர்கள் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்து கோஷமிட்டனர். மேலும் காலில் மறைத்து வைத்து இருந்த மஞ்சள் வண்ண பூச்சிகளையும் அவர்கள் வெடிக்க செய்தனர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பே கேள்விக்குறியாகும் அளவுக்கு விவகாரம் பூதகரமானது . அதீத பாதுகாப்பு கொண்ட பாராளுமன்றத்தில் இருவர் மக்களவைக்குள் குதித்தது எப்படி.? காலில் வண்ண பூச்சிகளை […]
நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி உள்ளே மக்களவையில் நுழைந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த்னர். 23 பேர் உயிரிழப்பு.! பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.! […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் துறை சார்ந்த தரவுகளையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் முக்கிய தரவு விவரங்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில் கடந்த […]
மாணவர்களின் பணத்தை வசூலித்து அதனை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது போல எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது தவறு.- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து. பாராளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் இன்று காலை முதல் உறுப்பினர்கள் கேள்வி கேட்டும், கோரிக்கைகள் வைத்தும் வருகின்றனர். அதற்கு மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் பதில் கூறியும் வருகின்றனர். அதன்படி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி சுப்ராயன் இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், பெரு நிறுவனங்களில் லட்சம் […]
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றி எறிந்த நிலையில், அது அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்ப்பட்ட போது, அறையில் அதிகாரிகள் இல்லாததால் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 29 – ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இந்த மாதம் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. […]