டெல்லியில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்!!

The Union Cabinet meeting is scheduled to be held in Delhi tomorrow under the chairmanship of Prime Minister Modi.

பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

மேலும், நிலுவையிலுள்ள பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியின் அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்!!