காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காந்திஜி நினைவிடத்தில் அஞ்சலி...!

Congress MP Rahul Gandhi has paid floral tributes to Lal Bahadur Shastri and Gandhiji on their birthdays.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காந்திஜி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இருவரது நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று தேசத்தந்தை காந்தியடிகள் அவர்களுக்கும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இவர்கள் இருவரது நினைவிடத்திலும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகிய இருவரது நினைவிடங்களுக்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.