டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் வலம் வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் நோட்டில் காந்தியின் படத்துடன், லெட்சுமி மற்றும் விநாயகர் படங்களை அச்சிடலாம் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து காங்கிரஸ், அண்ணல் அம்பேத்கர் படத்தை அச்சிடலாம் என்று தெரிவித்தது. இந்த நிலையில் பாஜக தலைவர் ராம் கதாம் ஒரு டிவிட்டர் பதிவில், சத்ரபதி சிவாஜி, அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி ஆகியோரின் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காந்திஜி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இருவரது நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று தேசத்தந்தை காந்தியடிகள் அவர்களுக்கும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இவர்கள் இருவரது நினைவிடத்திலும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் […]
சிறந்த தலைவரும் போராட்ட வீரருமாகிய காந்திஜிக்கு பிறந்ததினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன் என எல்.முருகன் பதிவிட்டுள்ளார். இந்திய விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரராகிய மகாத்மா காந்தி அவர்களின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் குடியரசுத் தலைவர் என பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் தலைவராகிய எல்.முருகன் […]
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக சாவர்க்கர் படத்தை போட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபை கூறியுள்ளது. இந்துத்துவ மதவெறி அரசியலின் முன்னோடி வி.டி. சாவர்க்கர் என்ற விநாயக் தாமோதர் சாவர்க்கர்.மகாத்மா காந்தி படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டிக்கொடுத்ததே இவர்தான் என்று குற்றம் சாட்டப்பட்டவர். கோட்ஷே-யின் குருநாதர். விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் வகையில், வெள்ளைக்காரர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, அந்தமான் சிறையிலிருந்து விடுதலையானவர். இவரது படத்தைத்தான் தற்போது ரூபாய் நோட்டில் […]