புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், மறுமலர்ச்சி கவிஞருமாகிய சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1826 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் பிறந்தவர் தான் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை. புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளராக திகழ்ந்த இவர், மாயூரம் மாவட்டத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இதனால் இவர் பெரும்பாலும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டு உள்ளார். இவரது கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிகள், பொது […]
சமரச வேத சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த ஞானி இராமலிங்க அடிகள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1823 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர் தான் இராமலிங்க அடிகள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் தனது ஒன்பது வயதிலேயே முருகன் பாடல்களை பாடி பலரது மனதையும் ஆட்கொண்டவர். பசி, பட்டினி, பிணி மற்றும் கல்வி இன்மையால் மக்கள் துன்பத்தை கண்ட இவர் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என மக்களிடம் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காந்திஜி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இருவரது நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று தேசத்தந்தை காந்தியடிகள் அவர்களுக்கும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இவர்கள் இருவரது நினைவிடத்திலும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் […]
வருடந்தோறும் ஆவணி மாதம் விநாயகரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பொழுது விநாயகரை சிலை செய்து தங்கள் பகுதியில் வைத்து வணங்கி, வழிபட்டு அதன் பின்பதாக கடலில் அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதே போல தமிழகத்திலும் இந்த விநாயகர் […]
நமது நாட்டின் தேசிய கீதத்தை இயற்றிய தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தனது கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக 1913-ஆம் அண்டு இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவரே. மக்களால் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் […]
மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் , கல்வி மற்றும் விளையாட்டை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணிய மனிதரை பற்றிய தொகுப்பு குறித்து விரிவாக காண்போம்.அவர் பெயர் நா. மகாலிங்கம் என்பதாகும். பிறப்பு: இவர், திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும் மற்றும் திருமதி.ருக்மணி அம்மையார்தம்பதிகளுக்கு 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் நாள் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பெயர் பழனிக்கவுண்டர்ஆவர். இவர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள் ஆகும். கல்வி: இவர் தனது பள்ளில்லல்வியை […]
இயற்பியல் அறிஞர் ராண்ட்ஜென் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 1845ல் மார்ச் மாதம் 27ஆம் நாள் அதாவது இன்று பிறந்தார். இவர், இளம் வயதிலேயே அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்ட காரணத்தால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவை தேர்ந்தேடுத்துப் படித்தார் .பின், அவர் ஜெர்மனியில் உள்ள பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது, உலகப்போர் வந்து விட்டதால் […]
ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் மார்ச் மாதம் 18ஆம் நாள் 1858ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் தியேடர் டீசல், எலிஸ் டீசல் ஆகியோர் ஆவர். இவர் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த ஒரு அறிஞர் ஆவர். இவரது கண்டுபிடிப்பு இந்த தலைமுறைகளை புதிய அத்யாத்தை தொடங்கிவைத்தார்.இவர் டீசலில் இயங்கும் இயந்திர பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார். […]
மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சிவ்ராஜ்சிங் சவுகான், பிரேம் சிங் சௌகானுக்கும் சுந்தர் பாய் சௌகானுக்கும் மகனாக சேகோர் எனும், ஊரில் மார்ச் மாதம், 5ஆம் தேதி, 1959 அன்று பிறந்தார். பின் இவர், சிவ்ராஜ்சிங் சௌகான் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றவர். பின், 1992ஆம் ஆண்டு சாதனா சிங்கை மணம் புரிந்தார். இவர், இந்திய அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார்.பின் படிப்படியாக அரசியலில் உயர்ந்த இவர், […]
கவிஞர் தாராபாரதி பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். தமிழகத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஆவார், மேலும் இவர், ஆசிரியர் மற்றும் கவிஞர் என பண்முகத்தன்மைகொண்டவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் […]
தமிழக வரலாற்றில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆண்கள் மட்டுமே களம் கண்ட தமிழக அரசியலில் தனிப்பெரும் சக்தியாய்…. வாழ்க்கையின் இறுதி நிமிடம் வரை போராடி வாழ்ந்து மறைந்தவர் செல்வி.ஜெ. ஜெயலலிதா. இத்தகைய இரும்பு பெண்மணியாய் திகழ்ந்த இவரை அம்மா… என்ற லட்சக்கணக்கணக்கான தொண்டர்களின் அன்புக்குரிய அழைப்பால் அழைக்கப்பட்டவர். அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதுவரை தமிழகத்தில் கோலோச்சி இருந்த திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் […]
உலகம் முழுதும் உள்ள தமிழ்ச்சொந்தங்களால் ‘தமிழ் தாத்தா’ என போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் அதாவது 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர்கள்:- வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் ஆவர், இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர் ஆவர். எனவே, உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றுத்தேர்ந்தார். பின் தனது 17 […]