போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு...ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

TN Govt Order Issued for Conducting Coaching Classes for Competitive Examinations through separate Channel for Education of Kalvi Television sanction

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை மற்றும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை.

இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்(UPSC, TNPSC, RRB) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில்,கல்வித்தொலைக்காட்சியில்தனிஅலைவரிசைஉருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில்,மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,இந்திய பொறியியல் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,வங்கித் தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்கள் பயன் பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கென்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை அமைத்து போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பவும்,தனிஅலைவரிசையை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

unknown node
போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு...ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!