TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட இடங்களில் உள்ள 90 காலிப்பணியிடங்களை நிரப்பு நடப்பாண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அடுத்த […]
தமிழகத்தில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு..! அதிகாரபூர்வ அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க […]
டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (டிஎன்பிஎஸ்ச), தொகுதி 2 மற்றும் 2A பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் தேர்வு 25.2.2023 அன்று நடைபெற்றது. 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்ய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என 3 மாவட்டத்திற்கும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெருங்கும் புயல்.! […]
நவம்பர் மாதம் குருப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும். – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையமான டிஎன்பிஎஸ்சி , தமிழக அரசு காலிப்பணியிடங்களில் பெரும்பாலான பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது . அந்த வகையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு அட்டவணை குறிப்பிடப்படாமல் இருந்தது. தற்போது , குரூப் 1 தேர்வு உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் நவம்பர் […]
டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது கலப்புமணம் முன்னுரிமை வழக்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கலப்பு மணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அழிப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் தொடுத்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் குரூப் டி தேர்வில் நிரப்பட்பட்ட 7382 பணியிடங்களில் அரசு தெரிவித்த கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை, 1.31 லட்சம் பேர் எழுதவில்லை தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை எழுத 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும், 1080 இடங்களிலும், சென்னையில் மட்டும் 149 இடங்களிலும் நடைபெற்றது. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்கை குறி முறையில் இந்த […]
தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கி .நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவது, 1080 இடங்களில் பிற்பகல் 12:30 வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப்-1 முதல் நிலை […]
டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வு கடந்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி. டிஎன்பிஎஸ்சி அரசு பணி குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது என ராமதாஸ் ட்வீட். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் […]
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைப்பு. நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 15/2022, நாள் 18.07.2022-60 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை. தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் , குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு தற்போது 21 முதல் 37வயது (எஸ்.சி/எஸ்.டி , எம்.பி.சி மற்றும் இதர பிரிவுக்கு ) வரை என நிர்ணயம் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை உயர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை […]
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பணி நியமனத்தை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என அரசு அறிவிப்பு. உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, இனி அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்பணி நியமனத்தை மேற்கொள்ளும் என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய காலத்தேவை, தற்போது ஏற்பட்டுள்ள சமூக ஊடகத்தின் வீச்சு, நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப, மக்கள் தொடர்பு மற்றும் களவிளம்பரங்கள் செய்யப்பட வேண்டியதன் […]
தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில்,தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.ஏற்கனவே,மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது […]
தமிழகத்தில் குரூப் 2 குரூப் 2ஏ-இல் 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதனையடுது,கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 4,012 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், இத்தேர்வுகளை சுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( […]
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும்,பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் TNPSC அறிவித்திருந்தது. இந்த நிலையில்,தமிழகம் […]
தமிழகத்தில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 7,382 இடங்களை நிரப்ப ஜூலை 24-ல் குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வினை எழுத கடந்த மார்ச் 30 முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனிடையே,TNPSC தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:”மார்ச் 30 முதல் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் […]
இன்று முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று TNPSC தலைவர் அறிவிப்பு. இன்று முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்,வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். TNPSC அலுவலகத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:”274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 7,382 இடங்களை […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎப் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎப் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் பதிவேற்றதில் தவறு நேர்ந்தால் OTR கணக்கு மூலம் திருத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும், விண்ணப்பிக்கும் போது […]