தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி […]
போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை மற்றும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்(UPSC, TNPSC, RRB) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில்,மத்திய […]
தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி என்றும்,அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு நிதி […]