என் தாயை பற்றி தரக்குறைவாக பேசுகிறார்கள் – தழுதழுத்த குரலில் முதல்வர்

The Chief Minister has blamed DMK MP A. Razza for talking so poorly about his mother.

தன் தாயை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள் என திமுக எம்பி ஆ.ராசா மீது முதல்வர் குற்றசாட்டியுள்ளார்.

தமிழகத்தில் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் குப்பனுக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர்,  வெற்றி நடைபோடும் தமிழகம் என்றால், ஸ்டாலினுக்கு பயம், ஏனென்றால் அவர் எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார்.

ஏரளனமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளதால் தான் வெற்றிநடைபோடும் தமிழகம் என்கிறோம். ஸ்டாலினின் மூலதனமே பொய்தான். எங்கு சென்றாலும் அவர் பொய்தான் சொல்கிறார். தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம் இல்லை, அதிமுக ஆட்சியில் சட்ட – ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது. சென்னை போன்ற மாநகரில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முதல்வர், என் தாயை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள் என திமுக எம்பி ஆ.ராசா மீது முதல்வர் குற்றசாட்டியுள்ளார்.

என் தாயை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்ன ஆகும்? என கேள்வி எழுப்பி, ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களை போல் வளர்ந்தவன் நான். ஒரு சாமானியன் முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுக்களை வாங்க வேண்டுயிருக்கிறது என்று தன் தாயை பற்றி குறிப்பிடும்போது உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் முதல்வர் பேசியுள்ளார்.