மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும்., எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் – வைகோ

The party general secretary Vaiko told the volunteers that there will be a time for Mdmk too and do not worry about anything.

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் எனவும் தொண்டர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் அதிகரித்தாலும் இல்லை, அதிகார பொறுப்புக்கு வரபோகிறோம் என்ற சொல்லக்கூடிய இடத்திலும் இல்லை. இருப்பினும், இவ்வளவு நிதியை தந்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்கும் போது, மக்கள் 27 ஆண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், ஆகவே நடக்கின்ற நிகழ்ச்சிகள், நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் கூட இருக்கலாம். நாம் ஒரு பெரிய ஆட்சி பொறுப்புக்கு வர முடியவில்லையே என்று கவலையாக கூட இருக்கலாம். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் நிச்சயம் நாம் ஒரு காலம் வருவோம் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.