இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை...அரசு அவசர அறிவிப்பு!

The state government has announced that a night curfew will be imposed in Tripura from today till January 20.

திரிபுராவில் இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் இன்று முதல் (இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும்,திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள்,பொழுதுபோக்கு பூங்கா,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.அதன்படி,கொரோனா பரவலை தடுப்பு வகையில் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திரிபுராவில் இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.