எச்.ஐ.வி தொற்று : திரிபுராவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களிடையே எய்ட்ஸ் நோய் தீவிரமடைந்துள்ளதாக வெளியான தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழப்பு என சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த செய்தி உண்மை தான் என அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை அனைத்துமே கடந்த 2007ம் ஆண்டு முதல் […]
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி […]
Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவும், சில இடங்களில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருவதாகவும் […]
திரிபுராவில் ஜன 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திரிபுராவில் ஜனவரி 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ரதயாத்திரையில் சுமார் 200 பிரச்சார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் தர்மாநகரில் துவங்கி ஜனவரி 2 வரை ரதயாத்திரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில், இந்தியாவின் முதல் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக ஆரம்பிக்கப்படும் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உலக புத்த போப் அமைப்பின் தலைமை துறவியான வென் ஷக்யா காசன் என்பவரால், இந்த அடிக்கல் நாட்டு விழா தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட ஏழு நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் எம்.எல்.ஏ.சங்கர், பகுஜன் ஹிதாயா கல்வி அறக்கட்டளை-யின் (BHET) தலைவர் டாக்டர்.தம்மாபியா மற்றும் பலர் கலந்துகொண்டனர். புத்த மதத்தின் ஆன்மீக தலைவராக […]
பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப்,பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக தொடர கூடாது என்ற கருத்தை தலைமைக்கு தெரிவித்ததை, தொடர்ந்து பிப்லப் குமார் தேப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.இதனைத் தொடர்ந்து,திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா […]
திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல். பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிப்லப் குமார் தேப் அம்மாநில ஆளுநரிடம் அளித்திருந்தார். இவரது ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் கூறப்பட்டது. பிப்லப் குமார் தேப் பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் […]
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா. பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்தார் பிப்லப் குமார் தேப். இதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்லப் குமார் தேப் இளைய தலைவராக இருந்தபோது பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்தார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வந்தார் […]
திரிபுராவில் இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் இன்று முதல் (இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும்,திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள்,பொழுதுபோக்கு பூங்கா,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் […]
திரிபுராவில் நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் நாளை முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள், பொழுதுபோக்கு பூங்கா ,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்குச் சென்று பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,காலை 11 மணியளவில்,பிரதமர் மணிப்பூரின் இம்பாலில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில்,மணிப்பூரில் சுமார் ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார் மற்றும் ரூ.2,950 கோடி மதிப்பிலான ஒன்பது திட்டங்களுக்கு அடிக்கல் […]
திரிபுராவில் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மேற்கு வங்க தலைவர் சயனி கோஷ் அவர்கள் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக […]
திரிபுரா வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு இன்று சுமார் ரூ.700 கோடி அளவிலான நிதியை முதல் தவணையாக பிரதமர் மோடி வழங்க உள்ளார். திரிபுராவில் ஏராளமான மக்கள் அதிக பலமில்லாத வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில்,பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) என்ற திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் […]
சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளரை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். அஜோய் குமார் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 15 வது மக்களவையில், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர். அவர் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் […]
திரிபுரா முதல்வரின் இரட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் திரிபுராவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதாக கூறியதை அடுத்து, மியான்மரை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் மாஃபியாவிடம் இருந்து அச்சுறுத்தல்களைப் பெற்றதால் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தற்போது Z+ பாதுகாப்பைக் கொண்டுள்ளார். இந்நிலையில், முதல்வர் பிப்லாப் குமார் தேப் கடந்த வியாழக்கிழமை மாலை தனது வழக்கமான நடைப் பயிற்சியின்போது, முதல்வரின் இல்லத்திற்கு அருகில் உள்ள சௌமுஹானி இந்திரா […]
திரிபுராவில் ஏற்பட்ட தீவிரவாத துப்பாக்கி தாக்குதலின் போது இரண்டு எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த தீவிரவாத படையினர் பாதுகாப்பு படை மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பும் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர். இதில் துணை ஆய்வாளர் உட்பட இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பாதுகாப்பு […]
திரிபுராவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வரவேற்கிறேன் என்று திரிபுரா காங்கிரஸ் தலைவர் பி.கே பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு பாஜகவுக்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். மம்தாவின் முயற்சி தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆளும் […]
திரிபுராவில் 105 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு அம்மாநில முதல்வர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் பிரம்மஹிரா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாரா கன்யா தெப்பமா. இவருக்கு 105 வயது ஆகிறது. இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். பலரும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்தியால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சி வரும் நிலையில், எவ்வித அச்சமும் இல்லாமல் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார் தெப்பமா. இதனை அறிந்த […]
திரிபுரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராம மக்கள்,மழை வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு ஆடை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சமயத்தில் திரிபுராவில் உள்ள மேற்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து சமீபத்தில்,மழை வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு ஆடம்பரமாக ஆடை அணிவித்து அவர்களின் பாரம்பரிய முறைப்படி மாலைகளை பரிமாற விட்டு திருமணம் […]
திரிபுரா அரசு கிஷோரி சுசிதா அபியான் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தால் மாநிலத்தின் 1 லட்சம் 68 ஆயிரம் 252 மாணவிகள் பயனடைவார்கள். புதிய திட்டத்தை செயல்படுத்த தற்போதைய நிதியாண்டின் மூன்று மாதங்களுக்கு ரூ.60 லட்சம் 57 ஆயிரம் 72 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கும். […]