#Breaking:புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

The meeting of the newly expanded Union Cabinet chaired by Prime Minister Modi has now begun.

பிரதமர் மோடி தலைமையில் புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் மாற்றங்கள் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர்.

இந்நிலையில்,விரிவுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது.டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் பேரவை கூட்டமும் நடைபெறுகிறது.