டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு செய்ய ஊதிய கமிஷன் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்படும். இந்த ஊதிய கமிஷனானது, நாட்டின் பணவீக்கம், வருவாய், விலைவாசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஊதிய உயர்வு மற்ற விவரங்கள் குறித்து மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்ற சலுகைகள் குறித்த மாற்றங்களை அமல்படுத்தும். இறுதியாக […]
டெல்லி : நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் மருத்துவ செலவீனங்களை போக்கும் நோக்கில் மத்திய அமைச்சரவை இன்று புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு காப்பீடு அளிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமைந்துள்ளது […]
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். வாக்காளர் அடையாள அட்டையுடன் (Voter ID Card) ஆதார் எண்ணை (Aadhar Card) இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும். பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. பிரதமர் […]
பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது உரையின்போது பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.எனினும்,இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும், […]
டெல்லி:3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களது போராட்டம் 300 நாட்களுக்கு மேலாக தொடர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாகவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் […]
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கெசெட் அதிகாரிகள் இல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,11.56 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்: “மத்திய அமைச்சரவை, தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு […]
பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு(ஊட்டச்சத்து) மத்திய அரசு ரூ .1.31 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 11.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் PM-POSHAN திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் மற்றும் இத்திட்டத்திற்காக சுமார் ரூ.1.31 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.பிஎம் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், போர்ச்சுகலில் பணிபுரிய இந்தியர்களை அனுப்பும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல். போர்ச்சுகலில் இந்தியர்களை பணியமர்த்துவதற்கு இந்தியா, போர்ச்சுகல் இடையே ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய பணியாளர்களை போர்ச்சுகல் அனுப்பவும், அங்கிருந்து பணியாளர்களை ஏற்கவும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய […]
இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையிலெடுத்து அவைகளை முடக்கி வருகின்றன. இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி […]
பிரதமர் மோடி தலைமையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையிலெடுத்து அவைகளை முடக்கி வருகின்றன. இந்நிலையில், நாளை பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் […]
பிரதமர் மோடி தலைமையில் புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் மாற்றங்கள் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில்,விரிவுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது.டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற […]
நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதாக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா 3 ஆவது அலை பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் கலந்தாலோசித்தனர். அப்போது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு […]
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று […]