அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

The consultative meeting with all the District Collectors began under the chairmanship of the Chief Secretary.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் தலைமையில் தொடங்கியது.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு, மூன்றாம் அலையை எதிர்கொள்வது குறித்தும், தடுப்பூசி தேவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு டிஜிபி, மருத்துவத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.