சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தகவல். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான […]
தமிழ்நாட்டில், முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம். தமிழ்நாட்டில், முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை, அபராதம் மட்டும்தான் விலக்கு அளித்துள்ளோம். தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசியது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டெல்லி, […]
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது என ராதாகிருஷ்ணன் தகவல். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது. தொடர்ந்து, மாஸ்க் அணிதல் மற்றும் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 24 […]
தமிழக்தில் கொரோனாவை உறுதி செய்யும் ஆர்டி-பிசிஆர் ( RT – PCR) பரிசோதனைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரிசோதனை கட்டணம் குறைப்பு: அதன்படி, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் ரூ.400லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கான பரிசோதனை கட்டணம் ரூ.700லிருந்து ரூ.400ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக […]
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 261 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 223 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று 51,796 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,50,817 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் மேலும் 1 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 38,012 ஆக உயர்ந்துள்ளது. […]
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை வார இறுதி நாட்களில் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 23-ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கியுள்ளது. சென்னையில் மாலை 7 மணி வரை 1,600 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் […]
இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை நடத்து வார இறுதி நாட்களில் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த இரண்டு நாட்களில் இதுவரை இல்லாத அளவில் […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 348 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 320 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று 52,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,50,041 […]
கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாக இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் […]
தமிழகத்தில் அதிகமானோருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 80% பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்தார். சமீப நாட்களாக கொரோனா பாதிப்பில் 100% டெல்டா வகையால் ஏற்படுகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.தேவையான சிகிச்சை வசதிகள் […]
தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம். மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற […]
கொரோனா பரவலில் அலட்சியம் வேண்டாம், எச்சரிக்கையாக இருப்போம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வாயிலாக வலியுறுத்தல். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா என்ற பெருந்தொற்று 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டியிருக்கிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, மருத்துவ கட்டமைப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனால், அதற்கு முழுமையாக […]
அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததால் கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளது என அதிமுக அறிக்கை. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தாக்கம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கூடிய கூட்டத்தை கட்டிக்காட்டி, இது மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தினை நான் ஏற்கனவே எனது அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியிருந்தேன். தற்போது, இரண்டு, மூன்று நாட்களாக […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் தலைமையில் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு, மூன்றாம் அலையை எதிர்கொள்வது குறித்தும், தடுப்பூசி தேவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு […]
கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மூன்றாவது அலை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் நாளை காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைய தொடங்கிய நிலையில், தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் […]
தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையோடு செலுத்துக என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை. திமுக அரசு முறையாக மக்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால், அவைகள் முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. கடந்த 13ம் தேதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரி […]
தமிழகத்தில் அடுத்த வாரம் வழங்கப்பட வேண்டிய கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கிய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிவற்றிக்கு தடை இருந்தாலும், பலவற்றுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் […]
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை காலை ஆலோசனை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து […]
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளனர். இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் நேற்று […]
மே 31 வரை திரைத்துறை பணிகள் நிறுத்தப்படுகிறது என்று பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, கொரோனா பரவல் காரணமாக மே 31 வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்துள்ளார். மேலும், சென்ற வாரம் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து, கொரோனோ நிவாரண நிதியுதவியாக கூடுதலாக திரைப்பட […]