மாண்டஸ் புயல் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், காவல், தீயணைப்பு, வானிலை ஆய்வு மைய இயக்குநர், முப்படை அதிகாரிகள், வருவாய், வேளாண், பள்ளி உள்பட பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில், புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெரினா, […]
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியீடு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சசிகலா, உறவினரான சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை. சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது. துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார் எனவும் தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் […]
தூய்மைப் பணியாளர்கள் பணியினிடையே அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யுமாறு தலைமைச் செயலாளர் உத்தரவு. ஒவ்வொரு அலுவலகத்திலும் தூய்மைப் பணியாளர்கள் பணியினிடையே அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தும்,தூய்மை பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதை பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர். எனவே, […]
அரசு ஊழியர்கள் 28, 29ம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நில நிர்வாகம் கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி மாற்றப்பட்டு மீன்வளத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ்.பழனிசாமி, கூடுதலாக மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்து வந்த கருணாகரன், பணியிட மாற்றம் செய்து […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் தலைமையில் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு, மூன்றாம் அலையை எதிர்கொள்வது குறித்தும், தடுப்பூசி தேவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு […]
கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மூன்றாவது அலை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் நாளை காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைய தொடங்கிய நிலையில், தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் […]
முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவுக்கான சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதலாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கான சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்வி.பி ஜெயசீலனுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல். இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறையை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கனவே, உள்ள சாலை மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் பல்வேறு திட்டப்பணிகள் […]