ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கு... உரிமைகள் நிலைநாட்ட துணைநிற்பேன் – சீமான் உறுதி

Seeman, the co-ordinator of the Naam Tamil Party, tweeted that he would support the upholding of the rights of Adithya Tamils.

ஆதித்தமிழ்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்பட துணைநிற்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட்.

இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை அரும்பாக்கத்தில் ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? என்று கேள்வி எழுப்பி, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா? என்று கேட்டுள்ளார்.

மேலும், அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன் என்றும் அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்தேன் எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

unknown node