‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட தளபதி 68 படக்குழு!

துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கிய பின்பு, தற்போது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி உள்ளார். ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள அந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியான நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேற்று படத்தின் இரண்டாம் பாடலை அறிவிக்கும் வகையில், வித்தியாசமாக கவனம் ஈர்க்கும் வகையில், ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருந்தனர். அதில், தளபதி 68 திரைப்படம் அப்டேட் கேட்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் அறிவித்தபடி, இன்று “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பாடலை ‘தளபதி 68’ படக்குழுவான இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, பிரேம் ஜி, நடிகர் வைபவ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இந்த பாட்ட கேட்டா தமிழ்நாட்டுல யாருமே தூங்கமாட்டாங்க!#NobodySleepsHere is here for you
▶️ https://t.co/lIpUoakPuA #ConjuringKannappanFirstSingle
Thank u and Love u for this Vibe #MucicalDoctor @thisisysr bro ❤️
Produced by @Ags_production #KalpathiSAghoram…
— Sathish (@actorsathish) November 18, 2023
இதற்கு காரணம், சதீஸ் நடிக்கும் இந்த படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தியின் தயாரிப்பு நிறுவனம் தான் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது, யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 அப்டேட்…புது படத்தை ப்ரோமோஷன் செய்த நடிகர் சதீஷ்!
கான்ஜூரிங் கண்ணப்பன்
இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில் நடிகை ரெஜினா, நாசர், ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ராம், ஜேசன் ஷா, பெனடிக்ட் காரெட், நமோ நாராயணா, ஆதித்ய கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025