முன்களப் பணியாளர்களின் தியாகங்களால் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி!

Opposition leader Edappadi Palanisamy has said that Tamil Nadu is being saved by the sacrifices of people like Bhavani, a nurse who was isolated at home after giving up her oxygen bed for the benefit of others.

பிறர் நலன் கருதி தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டு கொடுத்து விட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த செவிலியர் பவானி உயிரிழந்துள்ள நிலையில், இவர்களைப் போன்றவர்களின் தியாகங்களால் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவ வசதிகள் தட்டுப்பாடும் தற்பொழுது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள நகர சுகாதார செவிலியராக பணியாற்றக்கூடிய பவானி என்பவர் பிறர் நலன் கருதி தனது ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து விட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த அன்புச்சகோதரி பவானி என்பவர் 22-04-2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.

28-04-2021 அன்று அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலர் படுக்கை கிடைக்காமல் வெளியே உயிருக்குப் போராடுகின்றனர் என்பதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து, 12-05-2021 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node
முன்களப் பணியாளர்களின் தியாகங்களால் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி!