பிறர் நலன் கருதி தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டு கொடுத்து விட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த செவிலியர் பவானி உயிரிழந்துள்ள நிலையில், இவர்களைப் போன்றவர்களின் தியாகங்களால் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவ வசதிகள் தட்டுப்பாடும் தற்பொழுது […]