தமிழக சட்டமன்ற தேர்தல் – ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு.!

An amount of Rs.11.56 crore has been allocated for the booking of polling booths in the Tamil Nadu Assembly elections.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தி வருகிறது தமிழக தேர்தல் ஆணையம். வரும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சகோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் செய்யக்கூடிய முன்னேற்பாடுகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, மின்சாரம், பர்னிச்சர் வசதிகளுக்காக ஒதுக்கியுள்ள நிதியை வங்கி ஆன்லைன் மூலம் மட்டுமே பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.