சூப்பர்...தமிழ்நாட்டுக்கான தேசிய விருதைப் பெற்ற அமைச்சர் கீதாஜீவன் – எதற்காக தெரியுமா?..!

Super ... Minister Geetha Jeevan who received the National Award for Tamil Nadu - Do you know why? ..!

டெல்லி:மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய மாநிலத்திற்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுள்ளார்.

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை அறிவுரைப்படி, உலகம் முழுவதும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கின்றது.

அந்த வகையில்,டெல்லியில் மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்தை ஊக்குவித்ததற்கான தேசிய விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில்,மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய மாநிலத்திற்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பெற்றார்.இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள்,அமைச்சர் பி.கீதாஜீவனுக்கு வழங்கினார்.