#ELECTIONBREAKING: திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான்..!

Seeman, the Naam Tamil Party coordinator, is contesting from Tiruvottiyur constituency in the assembly elections.

சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சில கட்சிகளில்தொகுதிப் பங்கீட்டில் இழுபறியில் இருந்து கொண்டே உள்ளது. இந்நிலையில், இன்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதாக சீமான் சீமான் அறிவித்திருந்தார்.

கடந்த 2019  நாடாளுமன்றத் தேர்தல் போலவே ஆண் வேட்பாளர்களுக்கு இணையாக பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் போட்டியிடவுள்ளனர். இந்த தேர்தலில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.

இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடயுள்ளார்.