நாளை முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெம் டெசிவர் மருந்து விற்பனை!

The Tamil Nadu Medical Services Corporation has announced that RemDesiver will be distributed at the Nehru Stadium in Chennai from tomorrow.

நாளை முதல் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ரெம் டெசிவர் மருந்து வழங்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவிப்பு.

இத்தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் நலன் கருதி கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இரண்டு கவுண்டர்கள் அமைத்து ரெம்டெசிவிர் மருந்து மிக குறைந்த விலையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது, மக்களின் வசதிக்கு ஏற்ப நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் வழங்கப்பட உள்ளது என்றும் தினசரி 300 நபர்களுக்கு மட்டுமே மருந்து வளப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககாவாம் அணிந்து மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துள்ளது. குறிப்பாக இடைத்தரகர்களை எவரையும் அணுக வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node