5 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஊரடங்கால் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது 18 வயதிற்குள் இருப்பவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறையின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவர் மற்றும் பிற கொரோனா மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்க […]
நாளை முதல் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ரெம் டெசிவர் மருந்து வழங்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவிப்பு. இத்தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் நலன் கருதி கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இரண்டு கவுண்டர்கள் அமைத்து ரெம்டெசிவிர் மருந்து மிக குறைந்த விலையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது, மக்களின் வசதிக்கு ஏற்ப நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து […]