மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி – தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

The High Court has questioned the provision of relief assistance to the disabled who have lost their livelihood.

வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும்என்றும் கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை எனவும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.133 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மிதமுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியில், ரூ.64.42 கோடி தரப்பட்ட நிலையி,ல் மீதமுள்ள ரூ.73 கோடி நிலை என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து வழக்கை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் கொரோனா நிவாரண உதவிக்கு ஒதுக்கிய தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.