நாளை ராகுல் காந்தி வருகை ! ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பு

It has been reported that senior Congress leader Rahul Gandhi will arrive in Tamil Nadu tomorrow to mark the Pongal festival.

பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளன்று “ராகுலின் தமிழ் வணக்கம்” தமிழகத்தில் தொடங்க உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் ,இந்த வருகையின் மூலமாக இந்தியா முழுவதும் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு ஒரு தார்மீக ஆதரவை ராகுல் காந்தி தர இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ராகுல் காந்தி வருகை ! ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பு