Tag: TNAssemblyElection2021

எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜக, அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார் – டி.டி.வி தினகரன்

திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல் கூட்டணி முடிவானதும் தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து அமமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். […]

#AMMK 4 Min Read
Default Image

ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா?- சுதாகர் ரெட்டி

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் […]

#ADMK 4 Min Read
Default Image

சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்.? வெளியான சுவாரஸ்ய தகவல்.!

வரும்  சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலின் தேதியை அறிவித்ததை தொடர்ந்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், கூட்டணியை பலப்படுத்த அதிமுக, திமுக போன்ற முன்னணி கட்சிகள் அதற்கான வேளையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதிக்கீடு செய்வதாக துணை […]

#AIADMK 5 Min Read
Default Image

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை – தமிழக தேர்தல் அதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்திருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றது. அந்தவகையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை சந்தித்து, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு […]

SatyapradaSaku 2 Min Read
Default Image

#BreakingNews : தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிப்பு

தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.ஆகவே  தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 88,956 வாக்கு மையங்கள், ஒரு மையத்தில் அதிகபட்சமாக 1000 […]

ElectionCommissionofIndia 3 Min Read
Default Image

தேர்தலுக்கும் ,கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

பல்வேறு நெருக்கடிகள் சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசுகையில், விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்கள் அறிவிப்பது இல்லை.கடன் வாங்குவது வளர்சிக்காக தான்.எல்லா மாநிலங்களும் கடன் […]

CMEdappadiKPalaniswami 4 Min Read
Default Image

#BreakingNews : இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு ! 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு ?

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனை தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் […]

#ElectionCommission 3 Min Read
Default Image

ராயபுரம் தொகுதியில் போட்டியிட அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனு

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.   தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப […]

FisheriesMinisterJayakumar 3 Min Read
Default Image

சூடு பிடிக்கும் தமிழக அரசியல் ! சசிகலாவை நேரில் சந்தித்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா.சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு இன்று தான் சசிகலா ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இதனிடையே இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் சமத்துவ மக்கள் […]

#Sasikala 3 Min Read
Default Image

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு தயாராகும் […]

TNAssemblyElection2021 2 Min Read
Default Image

தொடங்கிய விருப்ப மனு ! மூத்த அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டி ?

அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று  பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில், ரூ.15,000, புதுச்சேரியில் […]

#ADMK 3 Min Read
Default Image

#BreakingNews : உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் – சசிகலா

விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனால் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினார் சசிகலா. மரியாதையை செலுத்திய பின் சசிகலா பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறிச்சென்றதே நம்முடைய இலக்கு. நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள், நானும் துணையிருப்பேன்.விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன்.ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து […]

#Sasikala 2 Min Read
Default Image

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் , போடியில் துணை முதலமைச்சர் போட்டி

எடப்பாடி தொகுதிக்கு முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு துணை முதல்வரும் இன்றே விருப்ப மனு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று  பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் […]

TNAssemblyElection2021 3 Min Read
Default Image

வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு கமல் மறைமுகமாக அழைப்பு

வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.  சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார்.ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது. சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் […]

#KamalHaasan 3 Min Read
Default Image

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! வருகின்ற 17-ஆம் தேதி விருப்பமனு விநியோகம் – திமுக

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற 17-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்க திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் […]

#DMK 4 Min Read
Default Image

மக்களுக்கு முன்னேற்றம் தருவதே திமுகவின் இலக்கு – மு.க. ஸ்டாலின்

அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திமுக அரசு செயல்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியால் அனைத்து துறையிலும் தமிழகத்தை 50 ஆண்டு காலத்திற்கு பின்னால் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலைமையை அடியோடு மாற்றி – இந்திய அளவில் தமிழகத்திற்கும் – தமிழக மக்களுக்கும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், பெருமையையும் தேடித் தர வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கு. எனது […]

#MKStalin 3 Min Read
Default Image

பிப்ரவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகம் வருகை – கே.எஸ்.அழகிரி தகவல்

வருகின்ற 27-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வந்து ,மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்டறிய உள்ளார் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி  பொங்கல் தினத்தன்று […]

#KSAlagiri 4 Min Read
Default Image

#BREAKING : பிப்ரவரி 24-ஆம் தேதி விருப்பமனு விநியோகம் – அதிமுக

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் வழங்க அதிமுக தலைமைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.மேலும்  கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் […]

TNAssemblyElection2021 4 Min Read
Default Image

மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அவருடைய கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருவோம்  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று 3-ஆம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் […]

#MKStalin 5 Min Read
Default Image

திமுக நிகழ்ச்சியை பார்த்து ஆளுங்கட்சி நிறைவேற்றுகிறது – மு.க. ஸ்டாலின்

திமுகவை விட இந்த நிகழ்ச்சியை ஆளும் கட்சியினர் தான் அதிகம் பார்ப்பார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று  3-ஆம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் […]

#MKStalin 4 Min Read
Default Image