நெல்லையப்பர் கோவிலில் பரிவட்டம் கட்டி சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி.!

Former Congress leader Rahul Gandhi visited Sami Nellaiyappar temple during the election campaign.

தேர்தல் பரப்புரையின்போது நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் தேர்தல் பரப்புரை பயணமாக டெல்லியிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி நேற்று வந்தடைந்தார். அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நேற்று தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதையடுத்து இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பேராசிரியர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். இதனை முடித்த ராகுல் காந்தி நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலில் பரிவட்டம் கட்டி சாமி தரிசனம் செய்தார். இதனிடையே, நேற்று தூத்துக்குடியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற ராகுல் காந்தி, இன்று நெல்லையப்பரை வழிபட்டுள்ளார்.

unknown node