காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் அனைவரும் இன்றிரவு டெல்லி வர கத்தியின் தலைமை உத்தரவு. காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் இன்று இரவு டெல்லிக்கு வர வேண்டும் என அக்கட்சியின் தலைமை திடீர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை சம்மன், அக்னிபத் திட்டம், குடியரசு தலைவர் தேர்தல் என பல விவகாரம் தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையில் ராகுல் காந்தி நாளை […]
கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுள்ளது மத்திய அரசு என ராகுல்காந்தி விமர்சனம். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக தாக்கி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால், நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி என பல இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகள் தொடர்ந்த உயிரிழந்து கொண்டியிருக்கின்றனர். இந்தியாவில் நிலவி வரும் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உதவியை […]
சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம். தலைநகர் டெல்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற திட்டத்தை மத்திய அரசு, செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பிரமாண்டமான 16,921 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டடம், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது செயலகங்கள், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக, 13 ஆயிரத்து, […]
புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக பல […]
வாக்காளர்களை கவருவதற்காக ராகுல் காந்தி கோமாளி போல செயல்படுகிறார் என சி.டி.ரவி விமர்சித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது. அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என்று […]
தேர்தல் பரப்புரையின்போது நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் தேர்தல் பரப்புரை பயணமாக டெல்லியிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி நேற்று வந்தடைந்தார். அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நேற்று தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதையடுத்து இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள […]
சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று இந்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. அனைத்தும் தோல்விலேயே முடிவடைந்தது. இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் டெல்லி காவல்துறைக்கும், விவசாயிகளுக்கு […]
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை மேற்கொண்டனர். இந்த பேரணி அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி […]
தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது என கூறியுள்ளார். திருப்பூர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என பாஜக சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அது நாட்டின் அடித்தளம் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். வேற்றுமையில் ஒற்றுமை, கலாச்சாரங்கள் மீதான மரியாதை நாட்டின் அடித்தளம். தமிழ் கலாச்சாரத்தை […]
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி தமிழை மத்திய அரசு அவமதிப்பதை ஏற்க முடியாது என கூறியுள்ளார். மூன்று நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதன்படி நேற்று முதல் கட்டமாக கோவை மற்றும் திருப்பூரில் தனது பரப்புரையை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, நான் […]
மிக கடினமான காலங்களில் கட்சியுடன் நின்றவர் அஹ்மத் பட்டேல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் காந்தி குடும்பத்தினரின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவருமாகிய அஹ்மத் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உறுப்புகள் செயலிழப்பால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் வாதிகளும் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது […]
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில், 5 முன்னாள் முதலமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தற்போது உள்ள எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உட்பட கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக […]
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16 பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள் இருந்து வருகின்றனர். கொலைக்கார வைரஸால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு […]
ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, விமர்சித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, பல்வேறு சாதனைகளை அக்கட்சி பட்டியலிட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஆட்சியின் தரமதிப்பீடு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், வேளாண்மை, வெளியுறவுக் கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் பாஜக அரசு தோல்வி கண்டுள்ளது என பொருள்படும் வகையில் எப் கிரேடு வழங்கியிருக்கிறார். ஸ்லோகன் உருவாக்கம், […]