புதுச்சேரி, காரைக்கால், வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம் – திமுக அறிவிப்பு.!

Change of interview date for DMK candidates for the general elections in Pondicherry and Karaikal.

புதுச்சேரி, காரைக்கால் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்.

தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலகங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி, தொகுதி பங்கீடு, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நேர்காணல் என தேர்தல் பணி தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, திமுக ஒருபக்கம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மறுபக்கம் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை பொது தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி – காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கான நேர்காணல்  ஏற்கனவே வரும் 6ம் தேதி மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

unknown node