தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் சமீப நாட்களாகவே பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும், ப்ளூ வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவி வருகிறது.
இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.